60 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
சிவகாசி அருகே 60 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி அருகே 60 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல்தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ஆல்பின்பிரிஜிட் மேரி தலைமையில் திருத்தங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 50 கிலோ கொண்ட 60 மூடைரேஷன் அரிசி இருந்தது. போலீசார் வேனுடன் 60 மூடைரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததோடு வேன் டிரைவர் சங்கரன்கோவில் தாலுகா மருதன் கிணறு பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது39) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கைது
விசாரணையில் அவர் திருவேங்கடம் ஆலடிப்பட்டியை சேர்ந்த காளிராஜ் என்பவருக்காக ரேஷன் அரிசி மூடைகளை கொண்டு போவதாக தெரிவித்தார். இதையடுத்து காளிராஜ் மற்றும் கலையரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசனை கைது செய்தனர். காளிராஜை தேடி வருகின்றனர்.
மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.