கூடலூரில் எஸ்டேட்டில் திருடிய 60 கிலோ காபி விதைகள் பறிமுதல் - முதியவர் உள்பட 3 பேர் சிக்கினர்


கூடலூரில் எஸ்டேட்டில் திருடிய 60 கிலோ காபி விதைகள் பறிமுதல் -  முதியவர் உள்பட 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தனியார் எஸ்டேட்டுக்குள் புகுந்து 60 கிலோ காபி விதைகளை திருடிய முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் காபி விதைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் தனியார் எஸ்டேட்டுக்குள் புகுந்து 60 கிலோ காபி விதைகளை திருடிய முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் காபி விதைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

காபி விதைகள் திருட்டு

கூடலூர் பகுதியில் காபி, குரு மிளகு, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைகிறது. தற்போது காபி விளைச்சல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் எஸ்டேட்டுகளில் காபி விதைகள் திருட்டும் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கூடலூரில் உள்ள தனியார் எஸ்டேட்டில் காபி விதைகள் திருடப்படுவதாக கூடலூர் போலீஸ் நிலையத்தில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப் -இன்ஸ்பெக்டர் இப்ராகிம் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.தொடர்ந்து கூடலூர் அள்ளூர் வயலைச் சேர்ந்த மாறன் (வயது 32), பாபு (25), ஏழுமுறம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (60) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் தனியார் எஸ்டேட்டில் காபி விதைகள் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

60 கிலோ காபி விதைகள் பறிமுதல்

தொடர்ந்து 60 கிலோ காபி விதைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, விவசாய விளை பொருட்களை திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சந்தேகப்படும்படி வரும் நபர்களிடம் இருந்து விவசாய விளை பொருட்களை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் கொடுத்து போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story