ரூ.131 கோடியில் 60 கி.மீ. தூரம் சாலை அமைக்கும் பணி


ரூ.131 கோடியில் 60 கி.மீ. தூரம் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.131 கோடியில் 60 கி.மீ. தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.131 கோடியில் 60 கி.மீ. தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாலை விரிவாக்க பணிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் புதிய சாலைகள் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரூ.17.50 கோடியில் அமைக்கப்பட்டு வரும் எட்டிவயல்-இதம்பாடல் இருவழிசாலை அகலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். இதுகுறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 28 சாலை, பாலம் அமைக்கும் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்காக அரசு ரூ.131 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் குறுகிய சாலைகளை இருவழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணி மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

19 இடங்களில்...

அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அந்த சாலைகளை நேர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 19 இடங்களில் 49 கி.மீ தூரம் சாலை அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story