கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 60 பேர் கைது


கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 60 பேர் கைது
x

ராமநாதபுரத்தில் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ராமநாதபுரம் சென்றார். முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றார்.

இந்தநிலையில் கவர்னர் வருகைக்கு, எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.

60 பேர் கைது

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கவர்னர் செயல்படுவதாகவும், அவரை கண்டித்தும் கோஷமிட்டபடி கருப்புக்கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 60 பேரை கைது செய்தனர்.


Next Story