60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
ராணிப்பேட்டை
நெமிலி ஒன்றியம், ஆட்டுப்பாக்கம் ஊராட்சியில், குடிநீர் பிரச்சினையை போக்க பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, ஊராட்சி ஒன்றியத்தின் 15-வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தேக்கத்தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ஆட்டுப்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் நித்யா ராமதாஸ், துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story