திண்டுக்கல்லில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 600 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்


திண்டுக்கல்லில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 600 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்
x

திண்டுக்கல்லில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 600 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தொடர் சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி இன்று கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் நகர் நல அலுவலர் இந்திரா, சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் திண்டுக்கல் பழனி சாலை, தாலுகா அலுவலக சாலை பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது தாலுகா அலுவலக சாலையில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த குடோனில் உணவகங்களில் சாம்பார் பார்சல் கட்டிக்கொடுக்க பயன்படுத்தப்படும் பாலித்தீன் பைகள் உள்பட மொத்தம் 600 கிலோ பாலித்தீன் பைகள் இருந்தன. இதையடுத்து குடோனில் இருந்த ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில் ஈரோட்டில் இருந்து பெரியகுளத்துக்கு பாலித்தீன் பைகளை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. பெரியகுளத்துக்கு பாலித்தீன் பைகளை நேரடியாக கொண்டு சென்றால் அதிகாரிகளிடம் சிக்கிவிடலாம் என்பதால், திண்டுக்கல்லில் பதுக்கி வைத்து பின்னர் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து 600 கிலோ பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.



Next Story