ஆட்டோவில் ஏற்றி வந்த 600 மது பாட்டில்கள் பறிமுதல்


ஆட்டோவில் ஏற்றி வந்த 600 மது பாட்டில்கள் பறிமுதல்
x

ஆட்டோவில் ஏற்றி வந்த 600 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கணியனூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையிலிருந்து ஒரே நபர் அதிகப்படியான மது பாட்டில்கள் வாங்கிச் செல்வதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ராணிப்பேட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் திமிரியில் உள்ள கலவை ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கீழ்ப்பாடி கூட்ரோடு அருகே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அட்டை பெட்டிகளில் 600 மது பாட்டில்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. மேலும் இந்த மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் திமிரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமாரை (வயது 46) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story