600 வாகனங்களுக்கு அபராதம்
600 வாகனங்களுக்கு அபராதம்
மதுரை
மதுரை நகரில் தற்போது ஒருவழி பாதையில் வாகனங்கள் அதிகமாக சென்று வருவதாகவும், அதனால் விபத்துகள் ஏற்படுவதால் அதனை தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகச்சாமி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் கமிஷனர் திருமலைக்குமார், உதவி கமிஷனர் மாரியப்பன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, ரமேஷ்குமார், கார்த்தி, நந்தக்குமார், சுரேஷ் ஆகியோர் நகர் முழுவதும் நேற்று ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அதன்படி ஒருவழி பாதையில் சென்ற ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது ஒருவழிப்பாதையில் சென்று விதிமீறியதாக 80 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story