சாலை மறியலில் ஈடுபட்ட 62 அ.தி.மு.க.வினர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட 62 அ.தி.மு.க.வினர் கைது
x

சாலை மறியலில் ஈடுபட்ட 62 அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

சென்னையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டமும், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான வரகூர் அருணாசலம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி எம்.எல்.ஏ.க்களை கைது செய்ததை கண்டித்து அ.தி.மு.க.வினர் பல்வேறு கோஷங்களை எழுப்பியதோடு, பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 62 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story