31 விவசாயிகளுக்கு ரூ.62¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
கீழையூரில் 131 விவசாயிகளுக்கு ரூ.62¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் உணவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
வேளாங்கண்ணி:
கீழையூர் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாய விலைக்கடை, ஈசனூர் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் 131 விவசாயிகளுக்கு ரூ.62 லட்சத்து 89 ஆயிரத்து 248 மதிப்பிலான பயிர் கடன், உரம் மற்றும் வேளாண்மை இடுப்பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அருளரசு, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார்,ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தஜோதி பால்ராஜ், தனலட்சுமிவெங்கடபதி, கீழையூர் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பால்ராஜ், செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.