குமரியில் புதிதாக 62 பேருக்கு கொரோனா
குமரியில் புதிதாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
குமரியில் புதிதாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தொற்று பரிசோதனையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் நேற்று 831 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 36 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் என மொத்தம் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்த அனைவரும் ஆஸ்பத்திரியிலும், வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story