கொரோனாவால் புதிதாக 62 பேர் பாதிப்பு
கொரோனாவால் புதிதாக 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 18 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைபடுத்தி சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை மொத்தம் 242 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, கிருமி நாசினி கொண்டு கையை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related Tags :
Next Story