வழிப்பறி உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 6,251 பேர் கைது


வழிப்பறி உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 6,251 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2023 1:12 AM IST (Updated: 4 July 2023 5:34 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் கடந்த 6 மாதங்களில் வழிப்பறி உள்பட பல்ேவறு குற்றங்களில் ஈடுபட்ட 6,251 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி,

திருச்சி மாநகரில் கடந்த 6 மாதங்களில் வழிப்பறி உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 6,251 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

வழிப்பறி

திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடந்த 6 மாதங்களில் மட்டும் 6,251 பேர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து கடந்த 6 மாதங்களில் 15 சரித்திர பதிவேடு ரவுடிகள் உட்பட 61 பேர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா, போதை பொருட்கள்

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 94 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தும், அதில் 4 பேர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 29 ேபர்களுக்கு சரித்திர பதிவேடுகள் ஆரம்பிக்கப்பட்டு அவர்களது செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 195 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 2 பேர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை

நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி 446 ேபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 5 ரவுடிகள் உட்பட 6 பேர்கள் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் சிறைதண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாட்டரி சீட்டு விற்பனை செய்த 108 பேர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்ட 110 பேர்கள், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 1,061 பேர்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 3,721 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story