இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 6,348 பேருக்கு சிகிச்சை


இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 6,348 பேருக்கு சிகிச்சை
x

வேலூர் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 6,348 பேருக்கு ரூ.8 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 6,348 பேருக்கு ரூ.8 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்னுயிர் காப்போம் திட்டம்

ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் எளிதாக கிடைக்க தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் எதிர்பாராத சாலை விபத்துகளினால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சையை விரைவாக வழங்க இன்னுயிர் காப்போம் -நம்மை காப்போம் 48 திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சாலை போக்குவரத்து விபத்துக்களால் ஏற்படும் இறப்புகளை 2030-க்குள் பாதியாக குறைக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கான மருத்துவ செலவை குறைப்பதாகும். உயிர் காக்கும் திட்டமான இந்த திட்டம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கடியான காலக்கட்டமான விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் முழுமையான சிகிச்சை வழங்க அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை வழங்குவதை உறுதி செய்கிறது.

6,348 பேருக்கு சிகிச்சை

இதன் மூலம் விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குதல் மற்றும் நோயாளியின் தேவையற்ற இடமாற்றத்தை தவிர்க்க முடிகிறது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவர், பிறமாநிலத்தவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் சாலை விபத்துக்களில் பாதிப்படைந்தால் உடனடியாக பயனடையலாம்.

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடையும் நபர்களை சிகிச்சைக்காக உடனடியாக கொண்டு செல்லும் வகையில் அதிக விபத்து நடைபெறும் 9 நெடுஞ்சாலை இடங்கள் கண்டறியப்பட்டு அதற்கு அருகாமையில் தகுதி வாய்ந்த 11 மருத்துவமனைகளில் (4 அரசு மருத்துவமனைகள், 7 தனியார் மருத்துவமனைகள்) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை சாலை விபத்துகளில் லேசான மற்றும் படுகாயமடைந்த 6,348 பேர் ரூ.8 கோடியே 19 லட்சத்து 48 ஆயிரத்து 217 மதிப்பில் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story