சுதந்திர தினத்தையொட்டிவிடுமுறை அளிக்காத 65 நிறுவன உரிமையாளர்களுக்கு அபராதம்தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை


சுதந்திர தினத்தையொட்டிவிடுமுறை அளிக்காத 65 நிறுவன உரிமையாளர்களுக்கு அபராதம்தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களை சேர்ந்த உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடலூர்


தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ், தேசிய விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கும், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இதை மீறி சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி சுதந்திர தினமான நேற்று கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகரன் தலைமையிலான அதிகாரிகள் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் 96 நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

அபராதம்

இந்த ஆய்வின் போது சுதந்திர தினமான நேற்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, பணியாளர்கள் பணியாற்ற முன் அனுமதி பெறாத 65 நிறுவனங்கள் (கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள்) மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாற்று விடுப்பு

வருங்காலங்களில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அவ்வாறு பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் போது, உரிய படிவத்தை பூர்த்தி செய்து விடுமுறை நாளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.


Next Story