அரசு டவுன் பஸ்களில் 65 லட்சம் பெண்கள் இலவச பயணம்
அரசு டவுன் பஸ்களில் 65 லட்சம் பெண்கள் இலவச பயணம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் 65 லட்சம் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவச பயணம் செய்துள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு மே மாதம் 7-ந் தேதி பொறுப்பேற்றவுடன், 5 திட்டங்களை அறிவித்து கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணை பிறப்பித்தார்.
அவற்றில் மகளிருக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லாத பயணம் ஒன்றாகும்.
இந்த திட்டத்தின்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல் கடந்த மே மாதம் வரை அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் டவுன் பஸ்களில் 65,21,933 பெண்களும், 7,190 மூன்றாம் பாலினத்தவர்களும், 70,961 மாற்றுத்திறனாளிகளும் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story