சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.65 லட்சம் வருமானம்


சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.65 லட்சம் வருமானம்
x

சித்ரா பவுர்ணமியையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.65 லட்சம் வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

பொங்கல்பண்டிகை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோன்று திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம், சித்ரா பவுர்ணமியையொட்டியும் ஏராளமானவர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள். அவர்களின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதன்படி சித்ரா பவுர்ணமியையொட்டி கடந்த 4-ந் தேதி, 5-ந் தேதி ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலம் சார்பில் திருவண்ணாமலைக்கு வேலூர், திருப்பத்தூர், ஆற்காடு, சோளிங்கர், சென்னை, தாம்பரம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. சித்ரா பவுர்ணமிக்கு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் பஸ்சேவையை பயன்படுத்துகின்றனர். எனவே பக்தர்களின் நலனுக்காக கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வழக்கமான நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.80 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். தற்போது 2 நாட்கள் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 2 நாட்களில் சராசரியாக கிடைக்கும் வருவாயில் இருந்து கூடுதலாக ரூ.65 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story