ஆந்திராவுக்கு கடத்த இருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ஆந்திராவுக்கு கடத்த இருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்தி மற்றும் பறக்கும் படை குழுவினர் பொன்னை-சித்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமசாத்து கிராமத்தில் சாலை ஓரமாக ஆந்திராவுக்கு கடத்துவதற்காக 18 மூட்டைகளில் சுமார் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இந்த ரேஷன் அரிசியை பரிமுதல் செய்து, வேலூர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.


Next Story