660 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; முதியவர் கைது


660 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; முதியவர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய 660 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது ெதாடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி பழைய பஸ் நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனை சாவடி முன்பு ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தலைமை ஏட்டு குமாரசாமி தலைமையில் போலீசார் தேவேந்திரன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 22 சாக்கு மூடைகளில் 660 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அவற்றை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக கடலாடி தாலுகா, புனவாசல், லிங்கம் (வயது 60) என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ரேஷன் அரிசியை மூடைகளில் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் லிங்கம் மீது வழக்கு பதிவு செய்து மினி சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story