வீட்டிற்குள் புகுந்து 7 செல்போன்கள்-ரூ.11 ஆயிரம் திருட்டு: போலீசார் வலைவீச்சு


வீட்டிற்குள் புகுந்து 7 செல்போன்கள்-ரூ.11 ஆயிரம் திருட்டு: போலீசார் வலைவீச்சு
x

வீட்டிற்குள் புகுந்து 7 செல்போன்கள்-ரூ.11 ஆயிரம் திருட்டிய சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

கரூர்,

கரூர் வாங்கபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் குமார் (வயது 21). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று பிரகாஷ்குமார் தனது நண்பர்களுடன் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 7 செல்போன்கள் மற்றும் ரூ.11 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து பிரகாஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப்பதிந்து, செல்போன்கள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story