110 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


110 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

நாகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசியகொடியேற்றி 110 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசியகொடியேற்றி 110 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

சுதந்திர தினவிழா

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, குடிநீர் வழங்கல் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் 143 பேருக்கும், காவல்துறை சார்பில் 49 பேருக்கும் என 192 பேருக்கு பதக்கம், நினைவுப் பரிசு, ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், வருவாய்த் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில், 110 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 41 லட்சத்து 7 ஆயிரத்து 126 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மேலும் சுதந்திர தின விழாவையொட்டி மணல் சிற்பம் வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர் முத்துக்குமாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினையும் வழங்கினார்.விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் யோகேஷ்குமார் மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story