மத்திய அரசை வலியுறுத்தி 7-ந்தேதி மறியல் போராட்டம்


மத்திய அரசை வலியுறுத்தி 7-ந்தேதி மறியல் போராட்டம்
x

கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி 7-ந்தேதி மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

பெரம்பலூர்

நாட்டில் மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்கிட வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக்கான சட்டம் இயற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. ஒப்பந்த அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், கூலி ரூ.600-ம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story