படகு பழுதானதால் 64 நாட்கள் கடலில் தவித்த 7 மீனவர்கள் - பத்திரமாக மீட்பு


படகு பழுதானதால் 64 நாட்கள் கடலில் தவித்த 7 மீனவர்கள் - பத்திரமாக மீட்பு
x

படகு பழுதாகி கரை திரும்ப முடியாமல் 64 நாட்களாக கடலில் தவித்த 7 மீனவர்களை சக மீனவர்கள் கண்டறிந்து பத்திரமாக மீட்டனர்.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி, முருகானந்தம், வேலுச்சாமி உள்ளிட்ட 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் கரை திரும்பியிருக்க வேண்டிய மீனவர்கள் கரை திரும்பவில்லை. இது குறித்து காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தினர் காரைக்கால் கடலோர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இந்திய கடலோர காவல்படை மற்றும் காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 படகுகளில் சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது படகு பழுதாகி கரை திரும்ப முடியாமல் 64 நாட்களாக கடலில் தவித்த 7 மீனவர்களை சக மீனவர்கள் கண்டறிந்து பத்திரமாக மீட்டனர். இதையடுத்து அனைத்து மீனவர்களும் காரைக்கால் மேடு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


Next Story