7 மாத குழந்தை மர்மச்சாவு


7 மாத குழந்தை மர்மச்சாவு
x

ஊட்டி அருகே 7 மாத குழந்தை மர்மமாக இறந்தது.

நீலகிரி

ஊட்டி,

ஜார்க்கண்ட் மாநிலம் லூர்தகா மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரநாத் ஊரான். இவருடைய மனைவி சிசிலி ஊரான். இவர்களுக்கு 2 குழந்தைகள் மற்றும் 7 மாதமான சசிகா ஊரான் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்திரநாத் ஊரான் தனது குடும்பத்தினருடன் ஊட்டி அடுத்த மஞ்சூர் அருகே கோரகுந்தா பகுதியில் தனியார் எஸ்டேட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். தொடர் மழையால் சசிகாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் குழந்தை அழுது உள்ளது. இதையடுத்து குழந்தைக்கு பால் கொடுத்ததால், தூங்கி விட்டது. காலையில் பார்த்த போது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது. இதனால் பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு உடனடியாக மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதன்பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் குழந்தை மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story