தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Dec 2022 8:56 PM IST (Updated: 17 Dec 2022 9:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு பதிவாகவில்லை.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணில் பதிவாகி வருகிறது. இதனால், மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆண்கள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3 பேர் உள்பட மொத்தம் 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. சேலம், திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தெற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.


Next Story