கஞ்சா விற்ற 7 பேர் கைது


கஞ்சா விற்ற 7 பேர் கைது
x

கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றதாக பாளையங்கோட்டையை சேர்ந்த கண்ணன் மகன் சுபாஷ் (வயது 25), கக்கன் நகரை சேர்ந்த மணிகண்டன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் மேலப்பாளையம் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கஞ்சா விற்றதாக மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்த ரசூல் மைதீன் (34), முகமது சதாம் உசேன் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பெருமாள்புரம் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கஞ்சா விற்றதாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியை சேர்ந்த இசக்கிராஜா (32), பெருமாள்புரத்தை சேர்ந்த இமானுவேல் (28) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story