லாட்டரி சீட்டு விற்ற 6 பெண்கள் உள்பட 7 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 6 பெண்கள் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் லாட்டரி சீட்டு விற்ற 6 பெண்கள் உள்பட 7 பேர் கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை சிலர் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து லாட்டரி சீட்டு விற்ற தெரிசனங்கோப்பு அருகில் உள்ள ஞாலம் மேலத்தெருவைச் சேர்ந்த கிஷோர் (வயது 31), ஈசாந்திமங்கலம் செண்பகநகரைச் சேர்ந்த ஜோதி (32), பள்ளிவிளை ரெயில்வேநகரை சேர்ந்த அபினேஸ்வரி (19), ராஜாக்கமங்கலம் அருகில் உள்ள காரவிளையை சேர்ந்த அஞ்சு (22), கோட்டார் சரலூரைச் சேர்ந்த கலைச்செல்வி (26), அனந்த நாடார் குடியிருப்பைச் சேர்ந்த மேகலா (45), ஆசாரிப்பள்ளம் மேலப்பெருவிளையைச் சேர்ந்த பெனிட்டா (29) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் ரொக்கப்பணம், விற்பனைக்காக வைத்திருந்த ரூ.11 ஆயிரத்து 40 மதிப்புள்ள 276 லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story