குமரி மீனவர்கள் உள்பட 7 பேர் லட்சத்தீவில் கைது
எல்ைல தாண்டி மீன் பிடித்ததாக குமரி மீனவர்கள் உள்பட 7 பேர் லட்சத்தீவில் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உறவினர்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில்,
எல்ைல தாண்டி மீன் பிடித்ததாக குமரி மீனவர்கள் உள்பட 7 பேர் லட்சத்தீவில் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உறவினர்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மீனவர்கள்
குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சேசடிமை. இவரும் அதே பகுதியை சேர்ந்த சிலுவையன், கடலூரை சேர்ந்த பெரியசாமி, விழுப்புரத்தை சேர்ந்த தினகரன், நாகையை சேர்ந்த பிரவீன் குமார், அருண்குமார், மதுரையை சேர்ந்த பிரேம்குமார் ஆகிய 7 மீனவர்களும் கடந்த மாதம் (ஏப்ரல்) 16-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 'கிரேஸ்' என்ற விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடந்த 6-ந் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் இவர்களின் விசைப்படகு லட்சத்தீவு அருகே ெசன்றதாக தெரிகிறது.
7 பேர் கைது
அப்போது அங்கு வந்த லட்சத்தீவு கடற்படை அதிகாரிகள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குமரி மீனவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர். அவர்களை கவரத்தி என்ற இடத்துக்கு கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர். அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எல்லை தாண்டியது குறித்து 14-ந் ேததிக்குள் (இன்று) விளக்கம் அளிக்க வேண்டும் என மீனவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர். கைது செய்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் மீனவர்களை விடுவிக்கவில்ைல.
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டனி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர், குமரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.