திருச்சி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று


திருச்சி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று
x

திருச்சி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு பல மடங்கு குறைந்து 10-க்கும் கீழ் சென்று விட்டது. திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்கள் உள்பட மொத்தம் 65 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story