பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் ஆலங்குடி அரசமர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஆலங்குடி கீழாத்தூர் காலனி தெருவை சேர்ந்த கருணாநிதி (வயது 61), புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த வீரப்பன் (55), பாச்சிக்கோட்டை மேலக்காட்டை சேர்ந்த கணேசன் (54), விக்னேஷ் (32), ஆலங்குடி கண்ணகி தெருவை ேசர்ந்த முத்துராமன் மகன் மற்றொரு விக்னேஷ் (28) கல்லாலங்குடி கலைஞர் நகர் முத்துக்குமார் (55), நடுப்பட்டி பள்ளத்திவிடுதி புஷ்பராஜ் (46) ஆகிய 7 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.530 பறிமுதல் செய்தனர்.


Next Story