மது விற்ற 7 பேர் கைது


மது விற்ற 7 பேர் கைது
x

மது விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கரூர் வீரராக்கியத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (வயது 57), கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த சாமிநாதன் (53), நாகமணி (30), புதுக்கோட்டையை சேர்ந்த ரெங்கராஜ் (49), குளித்தலையை சேர்ந்த சிவானந்தம் (55), சின்னத்துரை (35), வெள்ளியணை சேர்ந்த மணிகண்டன் (50) ஆகிய 7 பேரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 82 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story