மது விற்ற 7 பேர் கைது


மது விற்ற 7 பேர் கைது
x

மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள வாளாந்தூர், புதுப்பாளையம், வை.புதூர், மேலகுட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட செந்தில்குமார்(வயது 52), வீரமலை(57), இளங்கோவன்(50), கரிகாலன்(51), ராமன்(52) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 31 மதுபாட்டில்களை பறிமுதல் ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மாயனூர் பகுதியில் சிலர் மது விற்பதாக மாயனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் கட்டளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த கல்யாணி(56), ராமன்(50) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story