புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்
தெப்பக்குளம் பகுதியில் புகையிலை பொருட்களை கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், மீனாட்சி கோவில் போலீஸ் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான தனிப்படையினர் காமராஜர் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 502 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரூ.41 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் இருந்த கிருஷ்ணாபுரம் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ்குமார்வியாஸ் (வயது 49), புது மீனாட்சி நகர், அம்ஜத் தெரு ரமேஷ்குமார் (44), எல்லிஸ் நகர் சுரேஷ் பிஷ்னோய் (27) ஆகிய 3 பேரை கைது செய்து, கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி போலீசார் காமராஜர் சாலையில் வாகன சோதனையின் போது புகையிலை பாக்கெட்டுகளுடன் வந்த லட்சுமிபுரம் குறுக்கு தெருவை சேர்ந்த சிவச்சந்திரன்சிங் (47), பாலரங்காபுரம் முப்தராம் (43), தெற்குமாசி வீதி, வெங்கடாஜலபதி சந்து நிதிஷ்குமார் (39), பிரகாஷ் (31) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.