இரு தரப்பினர் மோதல் 7 பேர் கைது
கள்ளக்குறிச்சி அருகே இரு தரப்பினர் மோதல் 7 பேர் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஆகாஷ்(வயது 22). இவருக்கும் க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்த இளையான் மகன் வானழகன்(23) என்பவருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று வானழகன் மற்றும் அவருடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் ஆகாஷ் வீட்டுக்குள் புகுந்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டையும், மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியது. இதில் காயம் அடைந்த ஆகாஷ் மற்றும் அறிவழகன் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்த வானழகன், முருகேசன் மகன் தமிழ்வாணன் (27), பாண்டியன் மகன் ராஜ்(33), நாகேஷ் மகன் செந்தில், மாயவன் மகன் மாரியாப்பிள்ளை(43), கர்ணன் மகன் கவியரசு(23), மாரியபிள்ளை மகன் சிவா(26), மாயக்கண்ணன் மகன் சதீஷ்(23), முருகேசன் மகன் தமிழ்செல்வன்(20) ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவுசெய்து வானழகன், மாரியாப்பிள்ளை, கவியரசு, சிவா, சதீஷ், தமிழ்ச்செல்வன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் ஆகாஷ் தரப்பினர் தங்களை தாக்கியதாக தமிழ்வாணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஆகாஷ், கதிரவன், அறிவழகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார் கதிரவனை கைது செய்தனர்.