வடகாடு அருகே குரங்கு கடித்து 7 பேர் காயம்


வடகாடு அருகே குரங்கு கடித்து 7 பேர் காயம்
x

வடகாடு அருகே குரங்கு கடித்து 7 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் குரங்கு ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த சரண்யா, விஜய், லட்சுமி, இந்திரா, சித்ரா, விஜயா உள்பட 7 பேரை கடித்தும், நகங்களால் கீறியும் உள்ளது. இதில் 3 பேர் குழந்தைகள் ஆவர். இதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மற்றும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி சென்றனர். மேலும் இவர்கள் தொடர்ந்து 4 நாட்கள் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை கூறினர். கீழாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்கை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி வனத்துறை மற்றும் கீழாத்தூர் ஊராட்சிக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த குரங்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அமர்ந்து பயமுறுத்துவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர அச்சம் அடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story