தாடிக்கொம்பு அருகே மினி வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
தாடிக்கொம்பு அருகே மினி வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாடிக்கொம்பு அருகே உள்ள அழகுபட்டி அன்னை தெரசாபுரத்தை சேர்ந்த 8 பேர், குளத்தூர் பாடியூர் அருகே உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு நேற்று முன்தினம் சாமி கும்பிடுவதற்காக சென்றனர். பின்னர் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து மினி வேனில் சொந்த ஊருக்கு திரும்பினர். அந்த வேனை அழகுபட்டி காலனியை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டினார்.
தாடிக்கொம்பு அருகே ஓடைப்பட்டி பகுதியில் வந்த வேன் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த அன்னை தெரசாபுரத்தை சேர்ந்த மசக்கண் (வயது 8), பச்சையப்பன் (62), ரம்யா, வசந்தகுமார், ஜெயபாக்கிய சீலி, வாசுகி, டிரைவர் சேகர் ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.