7 பவுன் நகை- பணம் திருட்டு


7 பவுன் நகை- பணம் திருட்டு
x

பட்டுக்கோட்ைட அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்ைட அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மகள் வீட்டுக்கு சென்றார்

பட்டுக்கோட்டை லட்சதோப்பு ராஜகணபதி நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது63). இவருடைய மனைவி இறந்து விட்டார். இதனால் விஜயகுமார் தனது மனைவி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பீரோவில் பத்திரப்படுத்தி வைத்து இருந்தாா்.

சம்பவத்தன்று விஜயகுமார் ஆலங்குடியில் உள்ள தனது மகளை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

நகை- பணம் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமாா் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீ்ட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தாலிச்சங்கிலி மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசாா் வழக்குப்பதிவு செய்து நகை - பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story