மீனவர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு


பெரியதாழையில் மீனவர் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை கிராமத்தைச் சேர்ந்த கனி மகன் ஜோசப் அந்தோணி (வயது 50). மீனவர். இவர் கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அதே ஊரில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஜெபம் முடிந்து விட்டு வீடு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story