திங்கள்சந்தையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலி அபேஸ்

திங்கள்சந்தையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலி அபேஸ்
x

திங்கள்சந்தையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

திங்கள்சந்தையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொருட்கள் வாங்க வந்தவர்

திருவிதாங்கோடு முகமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேலப்பன். இவருைடய மனைவி காந்திமதி (வயது65). இவர் சம்பவத்தன்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க திங்கள்சந்தைக்கு வந்தார். பின்னர் பொருட்களை வாங்கி விட்டு வீட்டுக்கு செல்ல திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறினார்.

பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க தாலி சங்கிலியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் பஸ் முழுவதும் தேடினர். ஆனால், நகை கிடைக்கவில்லை. அதை யாரோ மர்ம நபர் பறித்து சென்றதாக தெரிகிறது.

போலீசில் புகார்

இதுகுறித்து காந்திமதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றார்களா? அல்லது கீழே தவறி விழுந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story