7 பவுன் நகை, வெள்ளி சங்கிலி திருட்டு


7 பவுன் நகை, வெள்ளி சங்கிலி திருட்டு
x

மதுரையில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 7 பவுன் நகை, வெள்ளி சங்கிலி திருட்டு நடைபெற்றது.

மதுரை

மதுரை காமராஜர்சாலை பழைய குயவர்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்பாபு (வயது 47). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலி, வெள்ளி சங்கிலி மற்றும் 2 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது. உடனே இது குறித்து அவர் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார். அதில் யாரோ மர்மநபர் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து நகையை திருடி சென்றதாக தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story