வாடகை செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்


வாடகை செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்
x

வாடகை செலுத்தாத 7 கடைகளுக்கு சீர்காழி நகராட்சி அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதியில் சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான 135 கடைகள் உள்ளன. அவற்றில் 86 கடைகளின் வியாபாரிகள் தலா ரூ.1 லட்சத்திற்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வாடகை பாக்கியை செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் 4 முறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை வாடகை பாக்கியை செலுத்தவில்லை.

7 கடைகளுக்கு `சீல்'

இந்தநிலையில் நேற்று நகராட்சி மேலாளர் காதர்கான் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் நகராட்சி அலுவலர்கள், வாடகை பாக்கி செலுத்தாத புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள 3 கடைகளையும், பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள 4 கடைகளையும் பூட்டி `சீல்' வைத்தனர். அப்போது அந்த கடைகளின் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சீர்காழி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம், சீனிவாசன் ஆகியோர் வியாபாரிகளை சமாதானப்படுத்தினர்.


Next Story