வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு 'சீல்'
வேலூரில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் முறையாக வாடகை செலுத்தாத கடைகளை அதிகாரிகள் 'சீல்' வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பெங்களூரு ரோடு, லாரி செட், பழைய மாநகராட்சி வளாகத்திற்கு எதிராக உள்ள வணிக வளாகம், வெங்கடேஸ்வரா பள்ளி எதிரே உள்ள காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் 150-க்கும் மேற்பட்ட கடைகளில் உதவி வருவாய் அலுவலர் தனசேகர் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வாடகை பாக்கி செலுத்தாத கடையின் மீது சீல் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி வாடகை பாக்கி செலுத்த தவறிய 7 கடைகளை மூடி 'சீல்' வைத்தனர்.
வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்கும் நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story