7 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு


7 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தக்கலையில் இருந்து 7 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலையில் இருந்து 7 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகராட்சி பகுதியில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் மருந்துக்கோட்டையில் உள்ள உரக்கிடங்கில் தேக்கி வைக்கப்படுகிறது. இவ்வாறு தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளில் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியானது நடந்து வருகிறது.

அந்த வகையில் தனியாக பிரிக்கப்பட்ட 7 டன் பிளாஸ்டிக்கழிவுகளை லாரி மூலம் அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு நகரசபை தலைவர் அருள் சோபன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கமிஷனர் லெனின், துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் மோகன் மற்றும் தூய்மை இந்தியா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story