ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வழக்கு: 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை


ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வழக்கு:  2 வாலிபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை
x

ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வழக்கில் 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்

சேலம்,

சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி 5 ரோடு தொழிற்பேட்டை அருகில் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது, ரெட்டியூரை சேர்ந்த தினேஷ்குமார் (22), நரேந்திரன் (23) ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள், ஆட்டோ டிரைவர் சிவக்குமாரை வழிமறித்து கஞ்சா பயன்படுத்தியதை ஏன் போலீசாரிடம் புகார் செய்தாய் என்று கூறி? அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த இருவரும் சிவக்குமாரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் தினேஷ்குமார், நரேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தநிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய தினேஷ்குமார், நரேந்திரன் ஆகிய 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதித்தும் நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு அளித்தார்.


Next Story