தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40), கூலித்தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து முருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்தார்.


Related Tags :
Next Story