தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சீனிவாசன் (வயது 25). முருகன் (26). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முருகன் 27-05-2018-ல் சீனிவாசனை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன் அளித்த புகாரில் கூமாபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஹஜிரா.ஆர்.ஜிஜி விசாரித்து முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
Related Tags :
Next Story