பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை நாமக்கல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்  கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை  நாமக்கல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x

ராசிபுரம் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர், மாமியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாமக்கல்

நாமக்கல்:

ராசிபுரம் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர், மாமியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

காதல் திருமணம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மகள் உதயதாரகையை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி ராமச்சந்திரனின் மனைவி உதயதாரகை பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

வரதட்சணை கொடுமை

இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் உதயதாரகையிடம் வரதட்சணை கேட்டு கணவர் ராமச்சந்திரன், மாமியார் மாதம்மாள் ஆகியோர் தொந்தரவு செய்ததால் மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்தது தெரிந்தது.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாரதி வாதாடினார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ராமச்சந்திரன் மற்றும் மாதம்மாளுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்களை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Next Story