இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள்
சிவகாசி அருகே உள்ள செவலூரில் இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள் கட்டும் பணியினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள செவலூரில் இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள் கட்டும் பணியினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இலங்கை தமிழர்கள்
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட செவலூர் கிராமத்தில் இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தர தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் தொடக்க விழா செவலூரில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். இலங்கை தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டும் பணியினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
செவலூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 60 தொகுப்பு வீடுகள் கட்டப்படுகிறது.
தொகுப்பு வீடுகள்
மேலும் 2 தனி வீடுகளும் கட்டப்பட உள்ளது. அதேபோல் அனுப்பன்குளம் முகாமில் 8 தொகுப்பு வீடுகள் கட்டப்பட உள்ளது. மொத்தம் 70 வீடுகள் கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குனர் திலகவதி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், சிவகாசி தாசில்தார் லோகநாதன், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனி தாசில்தார் கார்த்திகேயினி, ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி, செவலூர் பஞ்சாயத்து தலைவர் சித்ராதேவி, தி.மு.க. நிர்வாகிகள் வனராஜா, தங்கராஜ், அதிவீரன்பட்டி செல்வம், திலிபன்மஞ்சுநாத், திருத்தங்கல் இளைஞரணி வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.