குமரிக்கு 70 ஆயிரம் புலம்பெயர்ந்த பறவைகள் வந்துள்ளன


குமரிக்கு 70 ஆயிரம் புலம்பெயர்ந்த பறவைகள் வந்துள்ளன
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு 70 ஆயிரம் புலம்பெயர்ந்த பறவைகள் வந்துள்ளன என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு 70 ஆயிரம் புலம்பெயர்ந்த பறவைகள் வந்துள்ளன என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

பறவைகள் கணக்கெடுப்பு

குமரி மாவட்ட வனத்துறையின் சார்பில் நாகர்கோவில் அருகில் உள்ள புத்தளம் பகுதியில் உலக புலம்பெயர்ந்த பறவைகள் தினம் குறித்த நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

70 ஆயிரம்...

குமரி மாவட்டத்தில் புலம்பெயர்ந்த பறவைகள் அதிகளவு வருகின்றன. பறவைகள் எங்கிருந்து வருகிறது? என்பதை கண்டறியும் வகையில் பறவைகளின் கால்களில் வளையங்கள் மாட்டப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றபோது 170 வகையான சுமார் 70 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சைபீரியா, ரஷியா, சீனா, ஆர்டிக் பகுதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் குமரி மாவட்டம் வருகின்றன. இங்கு இருந்தும் பறவைகள் பிற நாடுகளுக்கு செல்கிறது.

விழிப்புணர்வு

மேலும் சுற்றுச்சூழல் மாசடைவதன் காரணமாக பறவைகள் வரத்து குறைய தொடங்கியுள்ளன. ஒரு வருடத்திற்கு 10 கோடி பறவைகள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பறவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்த பறவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருவதோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ரஷியா, சைபீரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த உள்ளான், ஆளா உள்ளிட்ட பறவைகளை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டதோடு, அந்த பறவைகளை பறக்க விட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாவட்ட உதவி வன அதிகாரி மனாசிர் ஹலீமா, பறவைகள் ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன், பால பிரஜாபதி அடிகளார் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story