எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 72 பேர் கைது


எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 72 பேர் கைது
x

எட்டயபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 72 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் தபால் அலுவலகம் முன்பு நேற்று விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலையின்மை பிரச்சினை மின்சார திருத்த மசோதா போன்றவைகளை கைவிடக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் 26 பெண்கள் உட்பட 72 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 72 பேரையும் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து விஜயன், மணிமாறன், முருகன் மற்றும் போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story